யார் அந்த சார்? சிறப்பு புலனாய்வு குழுவிடம் உறுதியாக கூறிய மாணவி
சிறப்பு புலனாய்வு குழுவிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் FIR வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
யார் அந்த சார்
இதில் ஞானசேகரன் வேறு ஒரு சாரிடமும் இது போல் நெருக்கமாக இருக்க வேண்டும் என கூறியதாக பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மட்டும் தான் குற்றவாளி என காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் நடைபெறும்போது, ஞானசேகரன் போன் ஃப்ளைட் மோடில் இருந்தது. மாணவியை மிரட்டுவதற்காக அவ்வாறு கூறி இருப்பார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறப்புப் புலனாய்வுக் குழு
ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள அரசியல் கட்சிகள் யார் அந்த சார் என ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து மாணவியிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கிய போது, ஞானசேகரன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஒருவருடன் சார் என தொலைபேசியில் பேசினார். மிரட்டி விட்டு வந்து விடுகிறேன் என செல்போனில் கூறினார் என ,மாணவி மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ஞானசேகரனின் செல்போனை ஆய்வு செய்ததில் பல்வேறு பெண்களின் ஆபாசப் படங்களும், திருப்பூரைச் சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் ஞானசேகரனுடன் இருக்கும் வீடியோ உள்ளதாகவும் கூறப்படுகிறது.