முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளு பேத்தி காதல் திருமணம் - சிம்பிளாக நடந்த நிச்சயம்!!
முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளு பேத்தியின் திருமண நிச்சயம் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.
அண்ணா
தமிழ்நாடு என்ற வரலாறு இருக்கும் வரை அண்ணாதுரை என்ற வரலாறும் ஒன்றாகவே பிணைந்து இருக்கும். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் இப்பொது வரை எதிர்க்கட்சிகளும் பெரிதும் விமர்சிக்காத நபராகவே திகழ்கிறார்.
இன்றும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களிடம் இருந்து தனித்து நிற்க ஒரு காரணமும் அண்ணாவே. அவரே, நாட்டில் முதல் முதலில் ஒரு மாநில கட்சி தேசிய கட்சியிடம் இருந்து ஆட்சி பறிக்க பிள்ளையார் சுழி போட்டவர்.அண்ணாவை பற்றி பேச இன்று ஒரு நாள் போதாது.
பேத்தி நிச்சயம்
அவரின் கொள்ளு பேத்தி பிரித்திகா ராணி ஐ.எஃப்.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஸ்பெயின் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கு தான் தற்போது திருமண நிச்சயம் நடந்துள்ளது.
அண்ணா சகோதரியின் மகனான பரிமளம் என்பவரை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார். பரிமளம் மகள் இளவரசி. இளவரசியின் கணவர் முத்துக்குமார். இத்தம்பதியின் மூத்த மகள்தான் பிரித்திகா ராணி. 2020-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் பிரித்திகா ராணி தேர்ச்சி பெற்றார்.
இவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான மதுரையை சேர்ந்த சித்தார்த் பழனிசாமி என்பவரும் பயிற்சியின் போது அறிமுகமாகி பின்னர் காதலர்களாகியுள்ளார்கள்.
இப்பொது சித்தார்த் ராஜஸ்தானில் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் திருமணம் நிச்சயம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்றும் அந்நிகழ்விற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தருவார் என்றும் தகவல் உள்ளது.