அந்த காட்சி'ல நடிக்கும் போது...கூட நடிக்குறவங்களே அப்படி தான் பண்ணுவாங்க..! அஞ்சலி ஓபன் டாக்..!
நடிகை அஞ்சலி நடிப்பில் தற்போது ராம் இயக்கத்தில் "ஏழு கடல் ஏழு மலை" படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி
நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.
தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பவுலி, சூரி நடிப்பில் "ஏழு கடல் ஏழு மலை" என்ற படத்தில் அஞ்சலி நடித்து முடித்துள்ள நிலையில், ஷங்கரின் "கேம் சேஞ்சர்", தெலுங்கில் ஒரு மீண்டும் என பிஸியாக நடித்து வருகின்றார்.
அப்படி நடிக்கும் போது..
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலி படங்களில் இடம்பெறும் ரொமான்ஸ் காட்சி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் பேசும் போது, திரைப்படங்களில் அழுவது, கத்துவது அனைத்துமே அந்த குறிப்பிட்ட கதாபாத்திரம் செய்யக் கூடியது தவிர நாங்கள் செய்வது கிடையாது என்பது போல தான் ரொமான்ஸ் காட்சிகளும் என்ற அவர், அந்த கதாபாத்திரங்கள் ரொமான்ஸ் செய்கின்றன என்றார்.
பளிச்
ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பல நேரங்களில் நெருடலான விஷயமாகவும் இருக்கும் என குறிப்பிட்ட அஞ்சலி, இதுதான் படப்பிடிப்பு தளத்தில் நடக்கக்கூடிய உண்மை என்று பளிச்சென கூறினார்.
ஆனால் ரசிகர்கள் மத்தியில் ரொமான்ஸ் காட்சி என்றாலே ஜாலியாக இருக்கிறார்கள் என்று ஒரு எண்ணம் இருப்பது இயல்பு தான் என்றும் அஞ்சலி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
You May Like This Video

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
