இது எத்தனை நாளுக்கு ஓடும்னு கேட்டாங்க; அவ்வளவு வித்தியாசம் இருக்கு - குப்புசாமி குறித்து அனிதா உருக்கம்!
புஷ்பவனம் குப்புசாமி குறித்து அவரது மனைவி அனிதா பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
அனிதா குப்புசாமி
நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப் பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடகியான அனிதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அண்மையில் அனிதா குப்புசாமி அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு திருமணத்தில் விருப்பமே இல்லாமல் தான் இருந்தது. இவர் என்னை காதலிக்கிறேன் என்று என்னுடைய சம்பந்தத்திற்காக இரண்டு வருடங்கள் எனக்காக காத்துக் கொண்டிருந்தார்.
வாழ வைத்த இசை
எனக்கு இசை மீது பாகுபாடு இருந்த காரணத்தில் தான் என்னுடைய பாகுபாடு குறிக்கோளும் நான் எப்படியாவது பின்னணி பாடகியாக மாற வேண்டும் என்று இருந்தது. அந்த நிலையில்தான் என்னுடைய அப்பா அவர் சொந்த ஊருக்கு என அழைத்துச் சென்று விட்டார்.

அப்போதுதான் நான் அவரது குரலை மிஸ் செய்தேன். அப்போதுதான் இவர்தான் நமக்கான ஜோடி என்று நான் முடிவு செய்தேன். இது குறித்து என்னுடைய குடும்பத்தில் உனக்கு கூறியபோது எல்லாரும் உனக்கு என்ன பைத்தியமா? என்று தான் கேட்டார்கள்.
அதன் பிறகு இது எத்தனை நாளுக்கு ஓடும் என்பதை பார்க்கலாம் என்றும் பலர் எங்களை விமர்சித்து வந்தனர். எங்களுக்குத் தோல் முதற்க் கொண்டு அவ்வளவு வித்தியாசங்கள். தோல் அதன் பின்னர் தான் இசை எங்களை அப்படி வாழ வைத்தது என உருக்கமாக பேசியுள்ளார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil