அனிருத்தை தான் கல்யாணம் பண்ணிப்பேன்... - பட்டென போட்டுடைத்த அரபிக் குத்து பாடகி - ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருக்குடைய குரலுக்கும், இசைக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அனிருத்
ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெளி பாடல் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் பெரும் ஹிட் கொடுத்தது.
இதையடுடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் வளர்ந்து வரும் இளம் இசையாமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆனால், இப்படி டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் அனிருத், அப்பப்போ ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகிவிடுகிறது.
சர்ச்சை
முதலில், பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷை காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை மறையகூடவில்லை.
அதற்குள் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிருத் பிரபல பாடகியான ஜோனிடா காந்தியும், அனிருத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் வந்துக்கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ஜோனிடா காந்திக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
அதேபோல், அனிருத்தும் ஜோனிடா காந்தியும் இணைந்து டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா, பீஸ்ட் படத்துக்காக அரபிக் குத்து, டான் படத்தில் பிரைவேட் பார்ட்டி என ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களோ என்று ரசிகர்களிடையே சற்று சந்தேகம் வரத்தான் செய்கிறது.
ஜோனிடா காந்தி ஓபன் டாக்
இந்நிலையில், சமீபத்தில் பாடகி ஜோனிடா காந்தி சமீபத்திய விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது, அவர் அந்நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. விருது விழாவில் பாடகி ஜோனிடா காந்தியிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
அப்போது, ரன்வீர் சிங், சூர்யா, அனிருத் இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இவர்களில் 2 பேருக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இவர்களில் அனிருத் தான் சிங்கிளாக உள்ளார். அதனால் அவரை தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினார்.