அனிருத்துக்கு விரைவில் திருமணம் - பொண்ணு யார் தெரியுமா?
ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனிருத்.
இந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெளி பாடல் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் பெரும் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் வளர்ந்து வரும் இளம் இசையாமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தற்போது கோலிவுட்டில் இவர் தான் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வருகிறார். இந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களுக்கு இசையமைத்த அவர், அடுத்ததாக கமலின் விக்ரம், அஜித்தின் ஏகே 62, ரஜினியின் தலைவர் 169 என அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
இதுதவிர தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ள புதிய படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இப்படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளார். இவ்வாறு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அனிருத் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம்.
அவர் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அனிருத் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் திரையுலகை சேர்ந்தவர் இல்லை என கூறப்படுகிறது. அவரின் திருமண வேலைகளும் சைலண்டாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.