ஆண்ட்ரியாவுடனான காதல் ஏன் முறிந்தது? முதல்முறையாக மனம் திறந்த அனிருத் - வைரலாகும் வீடியோ
அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருக்குடைய குரலுக்கும், இசைக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அனிருத் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனிருத்.
இந்த படத்தில் இடம்பெற்ற கொலைவெளி பாடல் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் பெரும் ஹிட் கொடுத்தது. இதையடுடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால் வளர்ந்து வரும் இளம் இசையாமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், ரஜினி, கமல் என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருவதால் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார் அனிருத். இப்படி டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் அனிருத், அப்பப்போ ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகிவிடுகிறது.
லிப் லாக் புகைப்படம்
சினிமாத் துறையில் நுழைந்த ஆரம்பத்திலேயே நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கும், அனிருத்துக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கிசுகிசு எழுந்தது. இவர்கள் இருவரும் நெருக்கமாக லிப் லாக் கொடுத்த புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
காதல் முறிந்தது ஏன்? அனிருத் பேட்டி
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியாவுடனான காதல் முறிந்ததற்கான காரணம் குறித்து அனிருத் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தான் காதலித்த பெண் தன்னை விட 6 வயது பெரியவர் என்பதால் தனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதிக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததால் இருவரும் பிரிந்து விட்டோம். நான் காதலித்த போது எனக்கு 19 வயது, நான் காதலித்த பெண்ணுக்கு 25 வயது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அனிருத்துக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் காதல் என்று இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், ஆண்ட்ரியாவுடனான பழைய காதல் விஷயம் இதற்கிடையே வைரலாகி வருகிறது.