இப்படி பொண்ணுதான் மருமகளாக வேண்டும் - அனிருத் அம்மா ஓபன்டாக்!
அனிருத்தின் திருமணம் குறித்து அவருடைய தாய் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
அனிருத் திருமணம்
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத். இவரின் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர். தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று படத்தின் மூலம் அறிமுகமானார்.
அப்போதிருந்தே இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன்,தனுஷ், சூர்யா என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இவரது தாய் லட்சுமி ரவீந்திரன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அனிருத் திருமணம் கடவுள் அருளால் எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் நடந்தால் நன்றாக இருக்கும். அவரின் மனதை புரிந்து கொள்ளும்படியான ஒரு பெண் வேண்டும்.
தாய் பேட்டி
அவனுடைய டைமிங்கை புரிந்து கொள்ள வேண்டும். கிரியேட்டிவிட்டி ஃபீல்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி ரொம்ப ரொம்ப முக்கியம். சொல்லப்போனால் நான் இன்றும் அவனை ஒரு குழந்தையாக தான் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறேன். அவன் மனது கஷ்டப்படுகிற மாதிரி எந்த ஒரு சொல்லும் சொல்ல மாட்டேன்.
அனிருத் ஸ்டுடியோவை நான் தான் கவனித்து வருகிறேன். அவனுடைய செடுயூலை பார்த்துக்கொள்கிறேன். அவனுடைய வேலை பார்த்தாலும் ஒரு லைனை நான் கிராஸ் பண்ண கூடாது என்று நினைப்பேன்.
அவனுக்கு சீக்கிரம் ஒரு பெண் கிடைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.