உணவு, நீர் இல்லாமல் 30 ஆண்டுகள் உயிர் வாழும் உயிரினம்! இதை கொல்லவே முடியாதா?

By Vinoja Apr 04, 2025 08:58 AM GMT
Report

பூமியிலிருந்து மனிதர்கள் அழிந்த பிறகும் ஒரு அரை மில்லி மீட்டர் உயிரினம் வாழும். சூரியன் அழியும் வரை இந்த உயிரினம் இறக்காது.

இந்த விலங்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் வாழ முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?அப்படிப்பட்ட ஒரு விசித்திர விலங்கு பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உணவு, நீர் இல்லாமல் 30 ஆண்டுகள் உயிர் வாழும் உயிரினம்! இதை கொல்லவே முடியாதா? | Animal That Can Survive Without Food For 30 Years

நீர்க்கரடி - டார்டிகிரேட்

அப்படி நீர்வாழ் உயிரினங்களில் விசித்திரமான ஒரு உயிரினம் தான் டார்டிகிரேட் என்று அழைக்கப்படும் நீர்க்கரடி.

கடலின் அடியிலும், பனி உறைந்து கிடக்கும் இடங்களிலும் வாழ்கின்ற ஒரு மிக மிகச் சிறிய உயிரினமாக டார்டிகிரேட் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உணவு, நீர் இல்லாமல் 30 ஆண்டுகள் உயிர் வாழும் உயிரினம்! இதை கொல்லவே முடியாதா? | Animal That Can Survive Without Food For 30 Years

நிலத்தில் வாழும் உயிரினங்களைக் காட்டிலும் நீரில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை தான் அதிகம். நீர் யானை, நீர்க் கோழி, நீர்க் குதிரை, நீர்ப் பறவையென எண்ணிலடங்கா நீர் வாழ்விலங்குகள் உயிர் வாழ்கின்றன.

அதிலும் முற்றிலும் மாறுபட்ட, விசித்திரமான விலங்கு தான் இந்த டார்டிகிரேட். காட்டுபகுதியில் வாழும் கரடிபோல் தோற்றமளிக்கும் இது, பார்ப்பதற்கு மாறுபட்ட தோற்றத்துடன் இருக்கும்.

உணவு, நீர் இல்லாமல் 30 ஆண்டுகள் உயிர் வாழும் உயிரினம்! இதை கொல்லவே முடியாதா? | Animal That Can Survive Without Food For 30 Years

வெற்றுக் கண்ணால் இந்த உயிரினத்தை பார்க்க முடியாது. நுணுக்கு காட்டி உதவியுடன் தான் பார்க்க முடியும். அந்தளவுக்கு சிறியதாக அருக்கும் இந்த உயிரினத்தின் பண்புகள் கேட்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.

இது 150 டிகிரி செல்சியஸ் அல்லது 302 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் மற்றும் மைனஸ் 457 டிகிரி குளிரிலும் வாழும் ஆற்றலை கொண்டுள்ளது.

உணவு, நீர் இல்லாமல் 30 ஆண்டுகள் உயிர் வாழும் உயிரினம்! இதை கொல்லவே முடியாதா? | Animal That Can Survive Without Food For 30 Years

பூமியில் முற்றாக மனிதர்கள் அழிந்த பின்னரும் இந்த உயிரினம் வாழும் சூரியன் வெப்பத்தை இழந்து இருளில் மூழ்கும் காலம் வரையில் இது நிலைத்திருக்கும்.

இந்த விலங்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வாழ முடியும். இந்த நீர்க் கரடியின் நீளம் 0.5 மில்லிமீட்டர் மட்டுமே இருக்கும்.

இதை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்தாலும் அல்லது பனியில் உறைய வைத்தாலும் அதனை கொல்ல முடியாது. அதன் ஆயுள் காலம் சுமார் 200 ஆண்டுகள் என குறிப்பிடப்படுகின்றது.