தப்பு தப்பா தொடுவாங்க...பெற்றோர்கள் கிட்ட கூட சொல்ல முடியாது - அனிகா வேதனை

Anikha Surendran
By Karthick May 20, 2024 06:51 AM GMT
Report

அனிகா

அஜித்தின் மகளாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "என்னை அறிந்தால்" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானார் அனிகா. அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீண்டும் அஜித்துடன் "விஸ்வாசம்" படத்தில் அவருக்கு மகளாக நடித்து மீண்டும் நல்ல வரவேற்பை பெற்றார்.

Anikha Surendran

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடிக்க துவங்கிய அவர், மலையாளத்தில் வெளியான 'ஓ மை டார்லிங்' படத்தில் நாயகியாக போல்டான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்தார். ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள "PT சார்" படத்திலும், தனுஷ் இயக்கும் "நிலவுக்கு என் மேல் என்ன கோபம்" போன்ற படத்திலும் அவர் நடித்து வருகின்றார்.

Anikha Surendran

PT சார் படத்தை ப்ரோமோஷன் செய்து வரும் அனிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில், பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசி இருக்கும் காரணத்தால் தான், PT சார் படத்தில் நடித்ததாக கூறினார்.

சினிமா'ல அதெல்லாம் சந்திச்சி தான் ஆகணும் - 19 வயது அனிகா ஓபன் டாக் `

சினிமா'ல அதெல்லாம் சந்திச்சி தான் ஆகணும் - 19 வயது அனிகா ஓபன் டாக் `

பேருந்தில் பெண்களை தவறாக தொடுவார்கள், டார்ச்சர் செய்வார்கள் என்று சுட்டிக்காட்டிய அனிகா, சில பெண்கள் இந்த விஷயங்களை அவர்களது பெற்றோர்களிடம் கூட சொல்லமாட்டார்கள் என தெரிவித்து தினமும் இம்மாதிரியான விஷயங்கள் நடக்கின்றன என வேதனை தெரிவித்தார்.

Anikha Surendran

இருப்பினும் தனக்கு அம்மாதிரியான அனுபவங்கள் நடந்தது இல்லை என சுட்டிக்காட்டிய அனிகா, தான் எப்போதும் அம்மா கூடவே இருப்பதாக தெரிவித்தார்.