சினிமா'ல அதெல்லாம் சந்திச்சி தான் ஆகணும் - 19 வயது அனிகா ஓபன் டாக் `

Anikha Surendran
By Karthick May 19, 2024 09:40 AM GMT
Report

அனிகா

என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் பெற்றவர் அனிகா. அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக அடுத்தடுத்த சில படங்களில் நடித்தவர் மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

anikha surendran interview about her glamour-pics

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் சட்டென மலையாளத்தில் 'ஓ மை டார்லிங்' படத்தின் ஹீரோயினாக அறிமுகமானது மட்டுமின்றி, முத்த காட்சியிலும் நடித்து ரசிகர்களை அதிரவைத்தார்.

சமூகவலைத்தளங்களிலும் அவ்வப்போது சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள "PT சார்" படத்திலும், தனுஷ் இயக்கும் "நிலவுக்கு என் மேல் என்ன கோபம்" போன்ற படத்திலும் அவர் நடித்து வருகின்றார்.

anikha surendran interview about her glamour-pics

சமூகவலைத்தளங்களில் அனிகாவின் கவர்ச்சியான புகைப்படங்களை பலர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து அனிகா பேசியுள்ளார்.

கிளாமராக... 

அப்பேட்டியில், சினிமாவில் இருக்கும் நடிகைகள் இந்த மாதிரியான விஷயங்களை சந்தித்து வருகிறார்கள் என சுட்டிக்காட்டி, நான் கிளாமராக டிரஸ் பண்ணுவது தனது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார்.

ஏன் இப்பவே அதப்பத்தியெலாம் கேக்குறீங்க...எனக்கு 17 வயசு தான் ஆகுது - கடுப்பான அனிகா

ஏன் இப்பவே அதப்பத்தியெலாம் கேக்குறீங்க...எனக்கு 17 வயசு தான் ஆகுது - கடுப்பான அனிகா

மேலும், தப்பான விமர்சனங்கள் வரும் என்றும் அது வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என குறிப்பிட்ட அனிகா, எப்படி டிரஸ் பண்ணாலும் தப்பா தான் பேசுவாங்க என அதிரடியாக தெரிவித்தார்.

anikha surendran interview about her glamour-pics

ஆனாலும், சில தப்பான விமர்சனங்கள் தன்னை மிகவும் ரொம்பவே பாதிக்கும் என சொன்ன அனிகா, தானும் மனுஷி தானே என்று கூறியுள்ளார்.