18 வயதில் லிப் லாக் காட்சியில் நடித்ததற்கு காரணம் இதுதான் - அனிகா ஓபன்டாக்
லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
அனிகா சுரேந்திரன்
மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்(18). தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் அனிகா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த 'ஓ மை டார்லிங்' படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்தப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதில், லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிககள் அதிகமாக இடம்பெற்றிருந்தது.
சர்ச்சைக்கு விளக்கம்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அனிகா, ’ஓ மை டார்லிங்’ ஒரு முழு நீள காதல் திரைப்படம். இதனால் படத்தில் முத்தக் காட்சி இடம்பெறுவதை தவிர்க்க முடியாது. இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே லிப்லாக் காட்சிக்கான முக்கியத்துவத்தையும் இயக்குனர் சொல்லிவிட்டார்.
கதைக்கு தேவைப்பட்டதால் தான் அவ்வாறு நடித்தேன். அந்த காட்சியில் ஆபாசம் எதுவும் இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு அது தெரியும் என தெரிவித்துள்ளார்.c