உள்ளாடை எங்கே வாங்குறீங்க? - கூச்சமில்லாமல் பதில் சொன்ன பிரபல நடிகை
உள்ளாடை குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை அனிகா வெளிப்படையாக பதிலளித்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரேன். பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து மிருதன், நானும் ரௌடி தான், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதனிடையே ஹீரோயினாக அறிமுகமாக திட்டமிட்டுள்ள அனிகா சமீபகாலமாக அசத்தலாக போட்டோஷுட்டுக்களை நடத்தி வருகிறார். இதற்கு பலனாக மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனிகா சுரேந்திரன் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர், இந்தக் கேள்வி கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும் ஆனாலும் எனக்கு சஜ்ஜஷன் தேவை, எந்த மாதிரியா உள்ளாடை யூஸ் பண்ணுகிறீர்கள்? என அவரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு சிறிதும் தயங்காமல் செம கூலாக பதிலளித்துள்ள அனிகா, நான் காட்டன் உள்ளாடையை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்வேன். ஆனால் ஹானஸ்ட்டாக சொல்ல வேண்டுமானால் அது பார்க்க கொடுமையாக இருக்கும். நான் Zivame போன்ற ஆன்லைன் சைட்டுகளில் தான் உள்ளாடை வாங்குவேன் என கூறியுள்ளார். அவரின் பதிலைப் பார்த்த இணையவாசிகள் பக்குவமாக விஷயத்தை கையாள்வதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.