மேடையில் வயதுக்கு மீறி அனிகா செய்த செயல் - விளாசும் நெட்டிசன்கள்!

Anikha Surendran
By Sumathi Mar 14, 2023 09:30 PM GMT
Report

பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை அனிகா நடந்துக்கொண்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

நடிகை அனிகா

மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்(18). தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேடையில் வயதுக்கு மீறி அனிகா செய்த செயல் - விளாசும் நெட்டிசன்கள்! | Anikha Surendran Attitude Oh My Darling

இந்நிலையில் அண்மையில் அனிகா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த 'ஓ மை டார்லிங்' படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்தப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சர்ச்சை சம்பவம்

இதில், லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தது. இதற்கு காதல் படமென்பதால் முத்தக் காட்சி இடம்பெறுவதை தவிர்க்க முடியாது என பதிலளித்தார். தற்போது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனிகா,

மேடையில் வயதுக்கு மீறி அனிகா செய்த செயல் - விளாசும் நெட்டிசன்கள்! | Anikha Surendran Attitude Oh My Darling

மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது மட்டுமின்றி, அவரை பேச அழைத்த போது ஓவராக ரியாக்ஷன் கொடுத்து, ஸ்டைலாக நின்று பேசியுள்ளார். இதனை நெட்டிசன்கல் பலர் வயதுக்கு மீறிய செயல் என விமர்சித்து வருகின்றனர்.