இளம் நடிகை அனிகா உயிரிழப்பா? வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
தற்போது இணையத்தில் பரவி வரும் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை கண்டு இவரது ரசிகர்கள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.
நடிகை அனிகா
கேரளா மாநிலத்தை சேர்ந்த நடிகை அனிகா, நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் இவர் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்ததால், இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர்.
தற்போது இவர், ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் ஹீரோயினாக நடித்த இரண்டாவது படத்திலேயே முத்தக்காட்சியில் தயக்கமே இல்லாமல் நடித்திருந்தார்.
இது சர்ச்சை ஆனதால், ஓ மை டார்லிங் ஒரு காதல் படம் என்பதால், முத்தக்காட்சி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும்போதே இயக்குநர் முத்தக்காட்சி குறித்து கூறியிருந்தார் என ஒரு பேட்டியில் விளக்கம் அளித்தார்.
மேலும், இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
கண்ணீர் அஞ்சலி
இந்நிலையில், இவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த போஸ்டரில், இவரது புகைப்படதோடு, செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருந்தது.
இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
