முதல் படத்திலேயே படுகவர்ச்சியாக நடித்த அஜித் மகள் அனிகா.... - டிரைலரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!
முதல் படத்திலேயே படுகவர்ச்சியாக நடித்த அஜித் மகள் அனிகாவின் டிரைலரை பார்த்து ஷாக்காகியுள்ளனர்.
நடிகை அனிகா
மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை அனிகா. இவர் தமிழில் அஜித் நடிப்பில் உருவான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் அனிகாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்ததால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதனையடுத்து, நடிகையாக வேண்டும் என்பதற்காக டாப் நடிகைகளை போல தனது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசினார்.
இப்படங்கள் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களை வியக்க வைத்தது. அனிகாவிற்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கியுள்ளது.
டிரைலரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தற்போது “ஓ மை டார்லிங்” என்ற படத்தில் நடிகை அனிகா ஹீரோயின்னாக நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால், இப்படத்தில் நடிகை அனிகா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு சீனில் ஹீரோவுடன் ரொம்ப நெருக்கமாக நடித்துள்ளார்.
மேலும், முத்தக்காட்சியிலும் நெருக்கமாக நடித்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே இப்படியா.. என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தை எப்படி இருக்கும் என்று நினைத்தாலே பயமாய் இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.