கிரிக்கெட் வரலாற்றிலேயே First'u..! லேட்டாடாக வந்ததால் அவுட்!! கதறிய மேத்யூஸ்!!
உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக சர்ச்சைக்குரிய வகையில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டாகி இருக்கின்றார்.
சர்ச்சையான அவுட்
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் இன்று டெல்லியில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திரம் ஏஞ்சலோ மேத்யூஸ் லேட்டாடாக வந்ததால் அவுட் கொடுக்கப்பட்டுள்ளார். வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் வீசிய 25வது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்த சம்பவம் நடந்தது.
சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்த நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் கிரீஸுக்கு வந்தார். ஆனால் தவறான ஹெல்மெட் கொண்டு வந்ததை அடுத்து அவர் மற்றொரு ஹெல்மெட் கேட்க, இலங்கையின் மாற்று வீரர் சரியான ஹெல்மெட்டுடன் ஓடினார்.
ஆனால் அதற்குள், வங்கதேசம் ஏற்கனவே 'டைம் அவுட்' கோரி முறையிட்டது. MCC விதிகளின்படி, "ஒரு விக்கெட் விழுந்த பிறகு அல்லது ஒரு பேட்டரின் ஓய்வுக்குப் பிறகு, உள்வரும் பேட்டர், நேரம் அழைக்கப்படாவிட்டால், பந்தைப் பெற தயாராக இருக்க வேண்டும், அல்லது மற்ற பேட்டர் அடுத்த பேட்டரைப் பெற தயாராக இருக்க வேண்டும்.
அந்த வகையில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். உலக கிரிக்கெட் வரலாட்டரில் வரலாற்றில் வீரர் ஒருவர் இந்த முறையில் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட அல்லது ஓய்வு பெற்ற 3 நிமிடங்களுக்குள் பந்து வீசவும். இந்த தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், உள்வரும் பேட்டர் அவுட், டைம் அவுட் ஆகும்."
இருப்பினும், கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான விளையாடும் நிபந்தனைகளின்படி, "இன்கமிங் பேட்டர்கள் 120 வினாடிகளுக்குள் (2 நிமிடங்களுக்குள்) தயாராகிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் தாமதமாக வந்தால், அவர்கள் வெளியேறுவார்கள்.