இனி எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை!
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்
கரூர், மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெறுவது வழக்கம்.

அப்போது சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதனால் 10 ஆண்டுகளாக இந்த செய்முறை நடைபெறாமல் இருந்தது.
நீதிமன்றம் தடை
பின், இந்த தடையை எதிர்த்து நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், இந்த நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார். ஆனால், எச்சில் இலையில் உருண்டு நேர்த்திக்கடன் செய்வதை உயர் நீதிமன்றமே அங்கீகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அனுமதி வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கரூர் ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்,
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan