10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது பெண் - 54 ஆண்டுகள் சிறை!

Sexual harassment Crime Thiruvarur
By Sumathi Nov 07, 2025 10:38 AM GMT
Report

மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை

திருவாரூர், தேதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (40). இவர் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது பெண் - 54 ஆண்டுகள் சிறை! | Angadi Worker Sexual Assault 10Th Boy Tiruvarur

இவர், 10ம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்திச் சென்று, ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை விட்டுவிட்டு.. அத்தானுடன் ஓட்டம் பிடித்த பெண்!

திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை விட்டுவிட்டு.. அத்தானுடன் ஓட்டம் பிடித்த பெண்!

54 ஆண்டுகள் சிறை

இது குறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லலிதாவை போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது பெண் - 54 ஆண்டுகள் சிறை! | Angadi Worker Sexual Assault 10Th Boy Tiruvarur

தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத் ராஜ், குற்றம்சாட்டப்பட்ட லலிதாவுக்கு, 2 போக்சோ பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள், மற்றொரு போக்சோ பிரிவின் கீழ் 5 ஆண்டுகள், மேலும் 2 பிரிவுகளின் கீழ் 4 ஆண்டுகள்,

5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.