வீடியோ காலில் ஆபாசமாக வர சொன்ன நபர் - கேன்சர் பாதித்த அங்காடிதெரு நடிகை கதறல்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை சிந்து தனக்கு ஆபாச அழைப்பு விடுக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை சிந்து
அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமானவர் சிந்து. சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கேன்சர் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார். இந்நிலையில் அவரது பரிதாப நிலை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், இரவு 12.45 மணிக்கு ஒரு தம்பியிடம் இருந்து ஒரு கால் வந்தது. என்னிடம் ஒரு பொண்டாட்டியிடம் பேசுவது போல் வாடி போடி என்று பேச ஆரம்பித்தான். தம்பி 12.45 மணியாகுது நாளைக்கு காலைல பேசு என்று கூறினேன்.
ஆபாச அழைப்பு
அதற்கு அந்த நபர், இப்போ தான் பேசனும், நான் இப்போதான் ஃபிரியாக இருக்கிறேன் என்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் எனக் கேட்டார். அதற்கு, ஒரு வாரம் 80 ஆயிரம் ஆகுது 5 லட்சம் தேவைப்படுது என்று கூறியதற்கு, 5 ஆயிரம் என்ன 10 லட்சம் தருகிறேன்.
வீடியோக்கால்ல வரமுடியுமா, ஒரு மார்பகம் தான் இல்லை இன்னொரு சைட் காட்டுறீயா நாளைக்கு அக்கவுண்ட்ல காசு போடுறேன்னு சொன்னான். இதை சொல்லக்கூடாது என்று நினைத்தேன். சிலர் இப்படியான கேடு கட்டப்படி நடக்குறாங்க என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.