என்னை விஷ ஊசி போட்டு கொல்லுங்க - புற்றுநோயால் கதறும் பிரபல நடிகை!

Cancer Tamil Cinema
By Sumathi Mar 02, 2023 10:10 AM GMT
Report

என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என நடிகை சிந்து கேட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சிந்து

அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமானவர் சிந்து. சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கேன்சர் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து அவர், 2020ஆம் ஆண்டு எனக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டு மார்பகங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டன. அன்று முதல் ஆங்கில மருந்துகள், நாட்டு மருத்துவம் என எத்தனையோ வைத்தியம் பார்த்து வருகிறேன்.

என்னை விஷ ஊசி போட்டு கொல்லுங்க - புற்றுநோயால் கதறும் பிரபல நடிகை! | Angaditheru Sindhu Asks Doctors To Kill Her Cancer

ஆனாலும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை. எந்த மருத்துவத்தையும் நான் குறை சொல்லவில்லை. அவர்கள் நன்றாக ட்ரீட்மென்ட் செய்தார்கள். என் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. தினம் நான் வலியால் துடிக்கிறேன். என் தம்பியிடம் நான் தூங்கும்போது தலையணையால் அழுத்தி என்னை கொன்றுவிடு என்று கூட கூறியுள்ளேன். எனக்கு எந்த மருந்தும் கேட்கவில்லை.

புற்றுநோயால் வேதனை

இதனால் எனக்கு முதலில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் போய் எனக்கு விஷ ஊசி போட்டு சாகடிச்சிடுங்க, தினம் தினம் சாவதற்கு பதில் ஒரேடியாக செத்துவிடுகிறேன் என்றும் அழுது கேட்டு பார்த்தேன். எனக்கு ஏன் அந்த கடவுள் சோதனை கொடுக்கிறார் என தெரியவில்லை. வெளியே சொன்னால் வெட்கக் கேடு, சாப்பிட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறேன். என் தம்பி பிளாக் பாண்டித்தான் எனக்கு தேவையான உதவிகளை செய்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட என் வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிக் கொடுத்தார். அது போல் நடிகை ஜெயலட்சுமியும் எனக்கு உதவுவார். நடிகை ஷகிலா ரூ 10 ஆயிரம் கொடுத்தார். பெரிய திரையிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக உதவிகளே வருவதில்லை. அது போல் பொதுமக்களும் எனக்கு ஜிபே நம்பரில் உதவி செய்கிறார்கள். என் வலியை குறைத்து என் மகளுக்கு ஒரு வாழ்வு அளித்தால் எனக்கு அதுவே நிம்மதியாக இருக்கும்.

என் உடல் வலி, மன வலி, என் மகளின் கோலம், இவற்றையெல்லாம் கண்டு நான் இரவில் புழுவை போல் துடிக்கிறேன். நான் யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.