திருவண்ணாமலையில் நிலச்சரிவா?எப்போ நடந்துச்சு..ஷாக்கில் ரஜினி கொடுத்த ரியாக்ஸன்!
திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து நடிகர் ரஜினி கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலச்சரிவு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று, நவம்பர் 29இல் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இதன் காரணமாகத் தமிழகத்தில் கனமழை பெய்தது.குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
வெள்ளம் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மேலும் திருவண்ணாமலையில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. மேலும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து,3 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
நடிகர் ரஜினி
இந்த நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்தது. ஒரே வீட்டிலிருந்த 7 பேர் சிக்கிப் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக அரசு முதல் பிரபலங்கள் வரை நிதியுதவி வழங்கினர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு,’’“எப்போ? ஓ மை காட்…” என்று கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரியாக்ஸன் கொடுத்தற்குப் பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.