விஜய் பாவம்.. பாஜக 2% கட்சி அல்ல - ஆதவ் அர்ஜுனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!
பாஜகவை இனியும் விமர்சித்தால் ஆதவ் அர்ஜுனா செய்த சட்டவிரோத நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்களை அம்பலப்படுத்த வேண்டி வரும்” எனறு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் எச்சரிக்க விடுத்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா
ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த லாட்டரி பணத்தில் நடக்கும் விழாவில் உள்ள அரசியல் சூழ்ச்சியை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை கோட்பாடுகளை வாழ்வியல் நெறிகளை தமிழகம் முழுக்க கொண்டு செல்வதற்கு நல்லவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். திருமாவளவன் ஏமாந்தது போல்,விஜய்யும் ஏமாந்து விடக்கூடாது.
ஆதவ் அர்ஜுனா, பாஜக இரண்டு சதவீத (2%) கட்சி அல்ல. 12 கோடி மக்களின் இதயங்களை இணைத்து உலகின் மிகப்பெரிய கட்சியாக செயல்பட்டு இந்தியாவை ஆளுகின்ற கட்சி.
பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் செய்த சட்டவிரோத நடவடிக்கைகளை, பணப்பரிமாற்றங்களை தமிழக மக்களின் முன்னே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும்.
திமுக உங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு பெற முயற்சி செய்து அது கிடைக்கவில்லை என்பதால்,
பல லட்சம் கோடி லாட்டரி பணத்தை காப்பாற்ற ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து அதிகாரத்தை பெறுவதற்காக நீங்கள் நடத்திய அரசியல் நாடகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மன்னர் ஆட்சி முறை இருக்கக் கூடாது.வாரிசு அரசியல் கூடாது என்று களம் கண்டு வெற்றி பெற்ற இயக்கம் பாஜக.
பாஜக
தமிழகத்திலும் திமுகவின் மன்னராட்சி முறையை ஒழித்து, ஊழலுக்கும், வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மக்கள் விரோத விரோத ஆட்சியை அப்புறப்படுத்துவது தான் .
நம் அனைவரின் முதல் பணி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மனம் என் மக்கள் யாத்திரை’ மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு ஆதரவாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை 18.5 சதவீதம் வாக்குகள் மூலம் தமிழக பாஜக கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆக்டோபஸ் போன்று ஒரு கொடிய அரக்க சக்தியாக தமிழகத்தையும் தமிழக மக்களையும் சுரண்டிக் கொண்டிருக்கும் திமுகவை அகற்றும் வகையில், தமிழக பாஜக அமைக்கின்ற கூட்டணி உருவாகும் என தெரிவித்துள்ளார்.