கல்யாணம்: யாரையும் சந்திக்கலையேனு அழுத்தம் - மனம் திறந்த ஆண்ட்ரியா!
தனது திருமணம் குறித்து நடிகை ஆண்ட்ரியா மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, ‘விஸ்வரூபம்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல், பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் செம்ம வைரலானது. தொடர்ந்து, மிஸ்கினின் பிசாசு 2 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
திருமணம்
தற்போது, அவர் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் வரும் 18ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ளார். இதற்கான புரொமஷனுக்காக கலந்துக் கொண்ட ஆண்ட்ரியா,

“20-களில் இருந்த போது 30 வயதில் திருமணம் செய்யனுமே, ஆனால் நாம் இன்னும் யாரையும் சந்திக்கவில்லையே என்ற அழுத்தம் தனக்கு இருந்தது. திருமணம் ஆன பிறகும் பலர் மகிழ்ச்சியாக இல்லை, அதேபோன்று பலர் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தனக்கு எதுவும் தெரியாது. எதுவாக இருந்தாலும் தன் மகிழ்ச்சிக்கு தானே பொறுப்பு. திருமணம் செய்து கொண்டால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கை புனிதமானது என்றால் மக்கள் ஆணை என்ன மலிவானதா? வடக்கு ஆளுநரின் அதிகார வெறி உச்சம் IBC Tamil