ஜெகன் ஆட்சியை பாராட்டி வைரலான பெண்; அடுத்த சில நாளில் தற்கொலை - பின்னணி என்ன?

Viral Video Andhra Pradesh YS Jagan Mohan Reddy Death
By Sumathi Mar 15, 2024 07:24 AM GMT
Report

ஜெகன் மோகன் ரெட்டியை புகழ்ந்து பேசிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகனண்ணா வீட்டுத் திட்டம்

ஆந்திராவைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (32). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், தெனாலி ரயில் நிலையத்தில், ஜன்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு விழுந்து கீதாஞ்சலி தற்கொலை செய்துகொண்டார்.

கீதாஞ்சலி

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையில், இந்தத் தற்கொலைக்குப் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஜன சேனா கட்சியினரின் பங்கு (ஜேஎஸ்பி) இருப்பது தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர். முன்னதாக, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜகவின் கூட்டணிக்காக போட்டிபோடும் ஜெகன் - சந்திரபாபு நாயுடு...! அதிரும் ஆந்திர அரசியல்

பாஜகவின் கூட்டணிக்காக போட்டிபோடும் ஜெகன் - சந்திரபாபு நாயுடு...! அதிரும் ஆந்திர அரசியல்

பெண் தற்கொலை

இந்த நிகழ்ச்சியில், கோதி கீதாஞ்சலி தேவி என்ற பெண் ‘ஜெகனண்ணா வீட்டுத் திட்டத்தின்’ கீழ் வீடு ஒன்றை பெற்றார். இதனை தொடர்ந்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியையும் அவர் புகழ்ந்து பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலானது. தொடர்ந்து, கீதாஞ்சலி மகிழ்ச்சியுடன் பேசிய வீடியோவை ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளபக்கத்தில் ஷேர் செய்திருந்தது.

அதன்பின், கீதாஞ்சலியையும் அவரது குடும்பத்தினரையும் சமூக வலைதளங்களில் பலர் ஆபாச வார்த்தைகளால் விமர்சித்தனர். பயங்கர ட்ரோலும் ஆனது. தற்கொலைக்குக் காரணம் இதுதான் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும், இதுவும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து கீதாஞ்சலியின் குழந்தைகளுக்கு ரூபாய் 20 லட்சம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவி வாசவி பத்மா, ``பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறிவைத்து ட்ரோல் செய்த சமூக வலைதளப் பக்கங்களைக் கையாள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.