3 நாட்கள் டாஸ்மாக்கை மூட உத்தரவு - அரசு அறிவிப்பு!
3 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
ஆந்திராவில் ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்து முடிந்தது. ஜுன் 4ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், YSRCP, TDP மற்றும் JSP உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்தந்த கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் மூடல்
2024 ஆந்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் பல்வேறு சமூக ஊடகப் பதிவுகளின் படி பல கண்ணோட்டங்களை அளிக்கிறது.
இந்நிலையில் ஆந்திராவில் ஜூன் 3, 4, 5ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.