மிளகாய் பொடி தூவி.. போலீஸார் சித்ரவதை - அலறிய குறவர் இன பெண்கள்!
பொதுமக்கள் 10 பேரை, திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொய் வழக்கு
கிருஷ்ணகிரி, புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ரேணுகா (35), தமிழரசன் (20), அருணா (27), கண்ணம்மாள் (65), ஸ்ரீதர் (7), சத்யா (40), ரமேஷ் (55), ராகுல் (5), ஐயப்பன் (45), பூமதி (24) . இந்த 10 பேரையும் இரவில் குற்ற வழக்கு சம்பந்தமான விசாரணைக்காக ஆந்திர போலீஸார் அழைத்து சென்றுள்ளனர்.

அதில், அவர்களின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி, கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பெண்களான ரேணுகா, அருணா ஆகிய இருவரையும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
சித்ரவதை
ஆனால் இந்த திருட்டில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர். அவர்களில் 8 பேரை விடுவித்துள்ளனர். 2 பேர் காவல் நிலையத்திலேயே உள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.