படம் எடுத்த ஆடிய நாகப்பாம்பு - மாஸ் பண்ண நினைத்து மருத்துவமனையில் மதுபாபு

India Andhra Pradesh
By Karthick Jul 25, 2024 10:10 AM GMT
Report

ஆந்திர மாநிலத்தின் பாம்பிடம் சில்மிஷம் செய்த இளைஞர் ஒருவர் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சேட்டை

குடிபோதையில் விஷ நாகப்பாம்புடன் விளையாட முயன்ற ஒருவர், மருத்துவமனையில் பரிதாபமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளியான தகவல்களின்படி, அந்த இளைஞரின் பெயர் மதுபாபு நாகராஜு.

andhra man plays with cobra in drunken state

சம்பவம் நடக்கும் போது அவர் மது போதையில் இருந்திருக்கிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரியில் உள்ள கல்லூரி அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியே வந்த பாம்பு மனிதர்களை கண்டவுடன் முட்புதர்களுக்குள் மறைந்து செல்ல முயன்ற போது அதனை பிடித்துள்ளார் மதுபாபு.

சும்மா படுத்திருந்தவரின் கழுத்தை நெரித்த மலைப்பாம்பு - அடுத்து நடந்த அதிர்ச்சி!

சும்மா படுத்திருந்தவரின் கழுத்தை நெரித்த மலைப்பாம்பு - அடுத்து நடந்த அதிர்ச்சி!

புதருக்குள் சென்ற பாம்பை மீண்டும் சாலைக்கு கொண்டு வந்த நாகராஜு அதனுடன் விளையாடத் தொடங்கினார். தொடர்ந்து தொந்தரவு செய்ததால், அருகில் இருந்தவர்கள், கிராமவாசிகளின் என பலரும் அவரை எச்சரித்துள்ளார்கள். ஆனால், மதுபோதையால் மதுபாபு அசால்ட்டாக இருந்துள்ளார். இறுதியாக குடிபோதையில் இருந்த மதுபாபுவை கடித்துள்ளது.


அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்து நாகராஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.