மது எந்த பிராண்டாக இருந்தாலும் ரூ.99 தான் - அமைச்சரவை முடிவு!

Andhra Pradesh
By Sumathi Sep 20, 2024 06:17 AM GMT
Report

மதுவை 99 ரூபாய்க்கு விநியோகம் செய்யும் புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை

ஆந்திரா, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மது எந்த பிராண்டாக இருந்தாலும் ரூ.99 தான் - அமைச்சரவை முடிவு! | Andhra Govt Approves New Liquor Policy

மேலும், எந்த பிராண்டாக இருந்தாலும் 180 மி.லி மதுவை 99 ரூபாய்க்கு விநியோகம் செய்ய முன்மொழியப்பட்டிருக்கிறது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பார்த்தசாரதி, மதுபான கடைகளுக்கான டெண்டர் லாட்டரி முறையில் தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

லட்டில் மாட்டுக் கொழுப்பு; இனி திருப்பதிக்கு என்னாகும்? பின்னணி!

லட்டில் மாட்டுக் கொழுப்பு; இனி திருப்பதிக்கு என்னாகும்? பின்னணி!

அமைச்சரவை ஒப்புதல்

மதுபான கடைகளுக்கான உரிமை கோருபவர்களிடம் திருப்பிச் செலுத்தப்படாத விண்ணப்பக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும். உரிமக் கட்டணமாக 50 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை நான்கு அடுக்குகளாக வசூலிக்கப்படும். இந்தக் கடைகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

chandrababu naidu

அதேபோல், 12 பிரீமியம் கடைகளுக்கு 5 ஆண்டு கால அவகாசத்துடன் அரசு உரிமம் வழங்கப்படும். இந்த பிரீமியம் கடைகளுக்கான திருப்பிச் செலுத்தப்படாத விண்ணப்பக் கட்டணம் 15 லட்ச ரூபாயாகவும், உரிமக் கட்டணம் ஒரு கோடி ரூபாயாகவும் இருக்கும்.

திருப்பதியில் பிரீமியம் கடைகள் அனுமதிக்கப்படாது. மாநிலத்திலுள்ள மொத்த மதுபானக் கடைகளில் குறைந்தது 10 சதவிகித கடைகள் கள் இறக்குவோர் ஒதுக்கப்படும். அக்டோபர் 1 முதல் இந்த புதிய மதுபான கொள்கை நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.