செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ராகுலுக்கு கட்சி கடிதம்!

Indian National Congress Rahul Gandhi K. Selvaperunthagai
By Sumathi Sep 20, 2024 05:03 AM GMT
Report

செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

செல்வப் பெருந்தகை

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ராகுலுக்கு கட்சி கடிதம்! | Bsp Write Letter Rahul Gandhi For Selvaperunthagai

ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது கொலை தொடர்பான வழக்குகள், செல்வப்பெருந்தகை மீது உள்ளன. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்துறைகளை கட்டுப்படுத்தும் ஒருவன்முறை கும்பலின் தலைவர்தான் வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரன்.

தமிழக அரசியலில் தோற்றுப்போனவர்...உலக அரசியல் செய்யப் போகிறாரா? செல்வப்பெருந்தகை!

தமிழக அரசியலில் தோற்றுப்போனவர்...உலக அரசியல் செய்யப் போகிறாரா? செல்வப்பெருந்தகை!

ராகுலுக்கு கடிதம்

அவருடைய மகன், இளைஞர் காங்கிரஸில் பொதுச்செயலாளராக இருந்த அஸ்வத்தாமன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

selvaperunthagai with rahul gandhi

அவரை இளைஞர் காங்கிரஸில் நியமித்தது செல்வப்பெருந்தகைதான். ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகை ஏன் கைது செய்யப்படவில்லை என மக்கள் கேட்கின்றனர்.

காங்கிரஸ் மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்ய அரசும், காவல்துறையும் தயங்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே,மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.