அதிசய மரம்; ஒரே வெட்டு..பீறிட்டு வந்த தண்ணீர் ஆச்சரியத்தில் ஆழ்ந்த அதிகாரிகள்!
வனப் பகுதியில் கண்டறியப்பட்ட அதிசய மரத்தில் தண்ணீர் பீறிட்டு வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அதிசய மரம்
ஆந்திர மாநிலம், கிந்துகுரு வனப்பகுதியில் பாபிகொண்டலு என்னும் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அதேசமயம் இந்த பாபிகொண்டா மலைத்தொடரில் பழங்குடியினக் குழுவான கோண்டா ரெட்டி பழங்குடியினர் வசிக்கிறார்கள். இவர்கள் பரம்பரையாக அங்கியுள்ள இயற்கை வளங்களின் இரகசியத்தை கூறிவிட்டு சென்றுள்ளனர்.
வனத்துறையினருக்கு தெரியாத பல அரிய மூலிகைகள்,செடிகள் மரங்கள் பற்றி இவர்கள் அறிந்துள்ளார்கள் அப்படி இவர்கள் கண்டு பிடித்த லாரல் என்ற ஒரு அதிசய மரத்தில் தண்ணீர் இருப்பதாகவும், அது வெளியில் பீய்ச்சி அடிக்கும் என்றும் கோண்டா ரெட்டி பழங்குடியினர் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர்.
பீறிட்ட தண்ணீர்
இதையடுத்து,வன அதிகாரிகள் மரத்தின் மரபட்டையை அரிவாளால் வெட்டினார். அப்போது மரத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியே வந்ததுள்ளது. இந்த மரத்தில் இருந்து சுமார் 20 லிட்டர் நீர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரத்திற்கு இயற்கையாகவே தண்ணீரை தனக்குள் தக்க வைக்கும் தன்மை கொண்டுள்ளதை கண்ட அதிகாரிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் இந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த இந்த மரம் இந்தியா,நேபாளம், வங்கதேசம்,மியான்மர்,தாய்லாந்து,லாவோஸ்,
கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.