வெளிய வந்தா செத்துடுவோம்; 3 வருஷமா இருட்டில் வாழ்ந்த குடும்பம் - பகீர் காரணம்!
தாயும் மகளும் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிர் பயம்
ஆந்திரா, குய்யேரு கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியபாபு. இவரது மனைவி கே.மணி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்தக் குடும்பம் கொரோனா வைரஸ் என்பது பில்லி சூனியம் போன்றது. அதை வைத்து தங்களை கொலை செய்துவிடுவார்கள் என்ற

மூட நம்பிக்கையில் தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கதவைப் பூட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மட்டும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளனர்.
காரணம் என்ன?
கணவர் சூரியபாபு மட்டும் வெளியே சென்று உணவுப் பொருட்களை வாங்கி வந்து ஜன்னல் வழியே கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி மற்றும் மகள்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்துள்ளது. இதனால் உள்ளூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் உதவியை நாடி அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது தாயும் மகளும் உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாகக் கூறி கதவை திறக்க மறுத்துள்ளனர். அதன்பின், கதவை உடைத்து அதிகாரிகள் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.