ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படத்தை காண்பித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!
ஆந்திராவில் நோயாளி ஒருவருக்கு, ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படத்தை காண்பித்து, அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
ஆந்திரா
பொதுவாக,குழந்தைகளுக்கு செல்போன்களில் படங்களை காண்பித்து, உணவளித்து வருவது வழக்கமான ஒன்று .அதைப்போன்ற ஆந்திராவில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் கையாண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் தொண்டங்கி அருகே உள்ள ஏ.கோட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆனந்தலட்சுமி .இவருக்கு வயது 55.இவர் சமீபகாலமாக மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ஆனந்தலட்சுமியின் மூளையின் இடது பக்கத்தில் 3.3 x 2.7 செ.மீ உள்ள கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அறுவை சிகிச்சையின்போது நோயாளி விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக நோயாளிக்கு பிடித்தமான ஜூனியர் என்.டி.ஆரின் ‘Adhurs’ திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளைக் காண்பித்து, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சை
சுமார் இரண்டரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நிலையில்,இன்னும் 5 நாட்களில் அந்த பெண் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஆந்திராவின் குண்டூரில் மூளை அறுவை சிகிச்சையின் போது 45 வயது பெண்ணை மருத்துவர்கள் பாகுபலி 2 பார்க்க வைத்தபோது இதேபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.