விஜய் டிவியின் தொகுப்பாளினி DD விவாகரத்திற்கு காரணம் இதுதான் - வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி தனது கணவரை பிறந்ததன் காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திவ்யதர்ஷினி
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி. இவர் பல வருடங்களாக தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பலமுறை சிறந்த தொகுப்பாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடுத்திருக்கிறார்.
பல இசை வெளியீட்டு விழாக்களையும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளையும் சகஜமாக தொகுத்து வழங்கும் டிடி எப்போதும் சிரித்த முகமாகவே இருந்து வருகிறார். முதன்முறையாக ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றால் அது இவருக்கு தான்.
விவாகரத்து
இந்நிலையில், இவர் 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் என்ற தன்னுடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை கொடுத்திருந்தனர்.
ஆனால் சில மாதங்களிலேயே இவர்கள் பிரிந்தனர். இவர்கள் இடையே நடந்த பிரச்னை குறித்து இவர் எப்பொழுதும் வெளிக்காட்டியதில்லை. தைரியமாக இருந்து பலரை மோட்டிவேட் செய்து இவர் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.
தற்பொழுது இவர் விவாகரத்து செய்து கொண்டதன் காரணம் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதில், "ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும் தெரிந்து கொள்ளாமலும் பாடி டிமாண்ட் காரணமாக திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து கொண்டதுதான்" என்று கூறியுள்ளார்.