நீங்க ஃபிரியாவா இல்ல மணியா..? பிரியாமணியிடம் அநாகரீமாக பேசிய நெறியாளர்
நடிகை பிரியாமணி தென்னிந்திய படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார்.
பிரியாமணி
பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி.பின்னர், பருத்திவீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்று அசத்தினார்.
தொடர்ந்து அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க துவங்கிய பிரியாமணி கிளாமர் கதாபாத்திரங்களின் பக்கம் சென்றார். கடந்த 2017-ஆம் ஆண்டு முஸ்தாபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியாமணி, அண்மையில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் நடிப்பில் "பாமாகலபம் 2" என்ற தெலுங்கு படம் வெளிவரவுள்ளது. இதற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் பங்கெடுத்த போது, நெறியாளர் மற்றொரு நடிகையான சீரத் கபூர்'ரிடம் நீங்கள் சீரத் for 4 என விளையாட்டாக வினவினார்.
அப்போது அருகில் இருந்து பிரியாமணி அப்போ எனக்கு என்ன சொல்லுவீங்க என கேட்க அதற்கு நெறியாளர், நீங்க ஃபிரியாவா இல்ல மணியா படம் நடிப்பீங்க என நக்கலாக வினவினார். இது விளையாட்டான கேள்வி என்றாலும் சிலர் விமர்சிக்க தவறவில்லை.
Oreyyyy ????? pic.twitter.com/SK6vK35Y6A
— GetsCinema (@GetsCinema) February 19, 2024