விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ராமதாஸ் சொந்த ஊரில் தனித்து போட்டியா? அன்புமணி பரபரப்பு பேட்டி!!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்ரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்ரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதற்காக கட்சிகள் தற்போதே வேட்பாளர்களை முன்னிறுத்த துவங்கி விட்டனர். திமுகவில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் தாங்கள் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
தனித்து போட்டி
இன்னும் அதிமுக கூட்டணியிலும், பாஜக - பாமக கூட்டணியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. டிடிவி தினகரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, கூட்டணியில் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமகவின் அன்புமணி ராமதாஸிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி கட்சிகளிடம் பேசி கலந்தாலோசித்து இது குறித்து அறிவிப்படும் என தெரிவித்தார்.
பாமக ராமதாஸ் நிறுவனர் எஸ்.ராமதாஸ் அவர்களின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.