இராமேஸ்வரம் மீனவர்கள் கைது - நிரந்தரத் தீர்வு எப்போது?அன்புமணி வேதனை!

Indian fishermen Anbumani Ramadoss Tamil nadu
By Vidhya Senthil Dec 07, 2024 09:30 PM GMT
Report

 இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் செய்யப்பட்டதற்கு நிரந்தரத் தீர்வு எப்போது கிடைக்கும் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

 மீனவர்கள் 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2-ஆம் தேதி 18 மீனவர்களும், 4-ஆம் தேதி 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது - நிரந்தரத் தீர்வு எப்போது?அன்புமணி வேதனை! | Anbumani Ramadoss Urged To Take Action Fishermen

அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால்,

அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். 2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்றஇலங்கை அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு

மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை.. முதல்வரின் அறிவிப்பு உறங்குகிறது - அன்புமணி!

மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை.. முதல்வரின் அறிவிப்பு உறங்குகிறது - அன்புமணி!

இலங்கை அரசு

ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாவுக்கு அளித்த பதிலிலும் மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது.

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது - நிரந்தரத் தீர்வு எப்போது?அன்புமணி வேதனை! | Anbumani Ramadoss Urged To Take Action Fishermen

ஆனாலும், அவர்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உள்ளிட்ட அங்குள்ள சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க

வேண்டும். அதற்கும் மேலாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.