ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்.. திமுக சாதனை அறிக்கையில் வெளியான தில்லுமுல்லு-அன்புமணி !

Anbumani Ramadoss M K Stalin DMK
By Vidhya Senthil Oct 04, 2024 05:30 PM GMT
Report

திமுக அரசின் தில்லுமுல்லுகளை திமுக அரசு நேற்று வெளியிட்ட சாதனை அறிக்கையில் புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

 திமுக அரசு 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடுகளின் மூலம் 31 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

anbumani

தமிழக அரசு பெருமை கொள்வது போன்று 60% தொழில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் 18.60 லட்சம் பேருக்கு தனியார் தொழிற்சாலைகளில் வேலை கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசின் சார்பில் கடந்த செப்டம்பர் 20-ம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் தனியார் நிறுவனங்களில் 5 லட்சத்து 8,055 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசே நேற்று வெளியிட்ட அறிக்கையில் 46 தொழிற்சாலைகள் மூலம் ஒரு லட்சத்து 39,725 பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கஞ்சா புழக்கம்..தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்து - அன்புமணி ராமதாஸ்!

பள்ளிகளில் கஞ்சா புழக்கம்..தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்து - அன்புமணி ராமதாஸ்!

இந்த 3 தகவல்களில் எது உண்மை? தமிழகத்தில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தொழில் திட்டங்களின் எண்ணிக்கை 500% உயர்த்திக் கூறுகிறார் அமைச்சர். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000%க்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர்.

 அன்புமணி

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழகத்தை வளர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது.

dmk

இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை சொல்ல வேண்டியிருக்கும் என்பார்கள். தமிழக அரசும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. பொய்களால் கட்டப்பட்ட கோட்டை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.