அவமானமா இருக்கு இதெல்லாம்? முதல்வரே பொறுப்பேற்கணும் - அன்புமணி ஆவேசம்!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் நாட்டின் கவனத்தை பெற்றுள்ளது. நேரம் செல்ல செல்ல உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே போகின்றன.
அன்புமணி ஆவேசம்
இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது வருமாறு,
சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆதரவில் இது நடக்கிறது. அதே போல, பொறுப்பு அமைச்சர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு பொறுப்பில்லை. இதற்கு அரசே பொறுப்பேற்கணும்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பின்தங்கிய மாவட்டங்கள். கல்வியில் கடைசி இடம். ஆனால், நிறைய டாஸ்மார்க்குகள் உள்ளன. டாஸ்மார்க்கில் டார்கெட் வைத்து செயல்படுகிறார்கள். அவமானமா இருக்கு.
போடப்படும் FIR'உம் தப்பா இருக்கு. இதற்கு முதல்வர், பொறுப்பு அமைச்சர் பொறுப்பு ஏற்கணும். இவர்களெல்லாம் அமைச்சர்கள் அல்ல. வணிகர்கள். இவர்களை வைத்து தான் முதல்வர் ஆட்சி செய்கிறார்.
அப்போ இப்படி தான் நடக்கும்.
மறந்துட்டாரா? முதல்வர்
இதில் சிபிஐ விசாரணை வேண்டும். ஆட்சியாளர்களுக்கு பங்கு இருப்பதால், சிபிசிஐடி விசாரணையில் உண்மை வராது. காவல்துறை உயதிகாரிகள் மீது FIR போட்டால் தான் பயம் வரும்.
பூரண மதுவிலக்கு வேண்டும். அப்போது தான் முடிவு வரும். தேர்தல் நேரத்தில் மட்டும் ஆட்சி வந்தால் பூரண மதுவிலக்கு'னு சொன்னாரு முதல்வர் மறந்துட்டாரா?
பாமக இது சம்மந்தமாக ஓரிரு நாளில் கடுமையான போராட்டத்தை நடத்தப்போகிறோம். சமூகநீதி பேசுறீங்க. அப்போ மதுவிலக்கு கொண்டுவாங்க.