குத்தகை முறை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்.. இதுதான் பாமகவுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்!

Anbumani Ramadoss Tamil nadu Anna University
By Vidhya Senthil Nov 22, 2024 03:30 PM GMT
Report

 அண்ணா பல்கலை.யில் குத்தகை முறை ஆசிரியர்கள் நியமனம் கைவிடப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

 அண்ணா பல்கலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டதில் மகிழ்ச்சி தான். ஆனால், செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் ,

anbumani opposes appointment anna universityprofessors

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது உண்மை. அதற்கு நான் கண்டனம் தெரிவித்த பிறகு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தான் அண்ணா பல்கலைக்கழகம் அதன் முடிவை மாற்றிக் கொண்டது.

அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை - முதல்வரை விளாசிய அன்புமணி!

அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை - முதல்வரை விளாசிய அன்புமணி!

ஆனால், நிதிக்குழு தீர்மானத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சுற்றறிக்கையில் தான் ஆசிரியர்கள் என்ற சொல் தவறுதலாக இடம் பெற்று விட்டது போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முயன்றுள்ளது.

அன்புமணி

அதுமட்டுமின்றி அதன் தவறு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக புதிய சுற்றறிக்கை நேற்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடி ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் பழைய சுற்றறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி கண்டித்திருக்காவிட்டால், ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை திணிக்கப்பட்டிருந்திருக்கும்.

anna university

ஆனால், குட்டு அம்பலமான பிறகு எதுவுமே நடக்காதது போன்று அண்ணா பல்கலைக்கழகம் நாடகமாடுகிறது. இது தவறு. ஓர் உயர்ந்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.