மக்களை பிச்சைக்காரனா - கூலியா வைக்கிறது தான் திராவிட மாடல் !! விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு...அன்புமணி காட்டம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு,
செய்தியாளர் சந்திப்பு
அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், பாமக நிர்வாகிகள் அனைவர்க்கும் மிக்க நன்றிகள். 56300 வாக்குகள் கிட்டத்தட்ட பெற்றுள்ளோம். இந்த தேர்தல் எவ்வாறு நடந்துள்ளது என்பது ஊடக நண்பர்களுக்கே தெரியும். நேர்மையான முறையில் ஒரு பைசா செலவில்லாமல் நாங்கள் இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளோம்.
கிட்டத்தட்ட திமுக 250 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. 6 ஆயிர ரூபாய் பணம் - 4 ஆயிரம் ரூபாய் பரிசும் கொடுத்துள்ளார்கள். 33 அமைச்சர்கள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள், 30'க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்தார்கள். 3 தவணையில் பணம் அளித்தார்கள். அரிசி, எண்ணெய், மூக்குத்தி போன்றவற்றை கொடுத்தார்கள்.
தேர்தல் ஆணையம் தேவையா? அப்படி'னு யாராவது இருக்காங்க'ல...அப்படி இருந்த அவுங்க unfit. எதுக்கு அவுங்களுக்கு சம்பளம், எதுக்கு இவளோ அதிகாரிகள்....அனைவர்க்கும் தெரியும் திமுக வாகனங்கள் அங்கையே இருக்கிறது என்று. ஒவ்வொரு கிராமத்திலும் திமுக பந்தல் போட்டுள்ளது. எத்தனை கோடி செலவு செய்துள்ளது.
பிச்சைக்காரனா
அவுங்க வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யணும். தெரியவே தெரியாது'னு சொன்ன அந்த தேர்தல் அதிகாரி unfit. இத பெருமையாக சொல்ல முதலமைச்சருக்கு ஒன்றுமில்லை. அதனை மீறி தொகுதி மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். நான் மக்களை குறை சொல்லமாட்டேன். பின்தங்கிய மாவட்டம் - தொகுதி இது. வாழ்வாதாரம், கல்வி, தொழில் எல்லாமே குறைவு.
[OG00PS
Percapita ரொம்ப கம்மி. 500'வே அவுங்களுக்கு பெருசு. 10 ஆயிரம் கொடுத்த யாருக்கு வேண்டுமானாலும் அவுங்க ஓட்டு போட்டுடுவாங்க. 77 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் இந்த நிலைமையில் தா வைத்துள்ளார்கள். அவுங்க படிச்சா இவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். அவர்களை அப்படியே வெச்சுக்கணும் இருக்கிறது தான் திராவிட மாடல்.
தமிழ்நாடு மக்கள் அடிமையா, பிச்சைக்காரனா, கூலியா வெச்சுக்கணும் இது தான் திராவிட மாடல். ஆட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல. பணத்திற்கு மக்கள் விசுவாசமாக இருந்துள்ளார்கள். இடைத்தேர்தல் தமிழகத்தில் ஜனநாயக படுகொலை அதனை தவிர்க்கலாம். இந்த தேர்தலில் சுயமரியாதையுடன் நாங்கள் பெற்ற வாக்குகள்.
ஜென்ம விரோதி
நான் compare பண்ணல. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக வாங்கிய வாக்குகளை விட நாங்கள் வாங்கியுள்ளோம். ஜெயலலிதா இருந்த போது ஒரு ஒட்டு கூட திமுகவிற்கு போடமாட்டாங்க. ஆனா இப்போ அவுங்க திமுகவிற்கு போட்டுட்டாங்க.
இதுக்கும் பொதுத்தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை. ஜெயலலிதா இருந்த போது, ஜென்ம விரோதியாக திமுகவை பார்த்தார்கள் அதிமுகவினர்.
வாக்களித்த மக்களுக்கு, கூட்டணி கட்சி தலைவர்கள், கட்சி தொண்டர்களுக்கு எனது நன்றிகள்.