தமிழ்நாட்டிற்கான ரூ.573 கோடி நிதி எங்கே? மத்திய அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி!

Anbumani Ramadoss BJP Narendra Modi
By Vidhya Senthil Aug 27, 2024 12:00 PM GMT
Report

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததற்காக தமிழகத்திற்கான நிதி ரூ.573 கோடியை நிறுத்திவைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

புதிய கல்விக் கொள்கை

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இன்று வரை வழங்கவில்லை. ஒருங்கிணைந்த கல்வித்திட்டமும், பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டமும் வேறு வேறு திட்டங்கள் ஆகும்.

தமிழ்நாட்டிற்கான ரூ.573 கோடி நிதி எங்கே? மத்திய அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி! | Anbumani Condemns New Education Policy

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த மறுத்ததற்காக தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மறுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மாநில அரசுகள் தங்களுக்கான கல்விக் கொள்கையை வகுத்துக் கொள்ள அதிகாரம் உள்ளது.

எனவே, புதிய கல்விக் கொள்கையையும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளையும் காரணம் காட்டி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை மறுப்பது அநீதி. மத்திய அரசு நிதி வழங்காததால், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு - ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு - ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

 ரூ.573 கோடி நிதி 

ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி, கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ஆகியவற்றையும் வழங்க முடியாத நிலைக்கு தமிழக அரசு ஆளாகியிருக்கிறது. இப்படி ஒரு நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டிற்கான ரூ.573 கோடி நிதி எங்கே? மத்திய அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி! | Anbumani Condemns New Education Policy

மாநில உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு, மறுக்கப்பட்ட நிதியை பெறுவதற்காக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கூட திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் இது குறித்து வாயைத் திறக்கவில்லை.

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையையோ, 3,5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் மற்றும் சட்ட அழுத்தங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.