பாமக சாதி கட்சினா விசிக என்ன கட்சி? அன்புமணி ஆவேசம்

Anbumani Ramadoss Thol. Thirumavalavan PMK
By Karthikraja Sep 15, 2024 06:34 AM GMT
Report

திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்டது சரி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

மதுரை வந்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

anbumani ramadoss latest pressmeet

அப்பொழுது திருமாவளவன், பா.ம.க-வை ஜாதி கட்சி என்கிறாரே என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு "விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்? என கேள்வி எழுப்பினார். 

ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா - சீமான் செய்த அட்வைஸ்

ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா - சீமான் செய்த அட்வைஸ்

பாமக

சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி பாமக. அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக. சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், போராடி வரும் கட்சி பா.ம.க. 

anbumani ramadoss pmk

இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம்.

மது ஒழிப்பில் பாமக பிஎச்டி முடித்துள்ளது. திருமாவளவன் தற்போதுதான் எல்.கே.ஜி வந்துள்ளார். எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பாமகவை சேர்ந்த 15000 பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பாமக தான் முயற்சி மேற்கொண்டது.

கனிமொழி

மது ஒழிப்பிற்காக பேசும் கனிமொழியை திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைக்க வேண்டும். அமைச்சரவையில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோ பதிவு மிகவும் சரியானது அதே நேரத்தில் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு.

திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு தேர்தலில் ஏன் வாக்கு கேட்டீர்கள்? இந்த 2 திமுக எம்.பி க்கள்தான் தமிழக அரசின் மதுக்கடைகளுக்கு 40 சதவிகிதம் மது சப்ளை செய்கிறார்கள்." என பேசியுள்ளார்.