அச்சச்சோ..இவரா..? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய பதவியில் ஆனந்த் ஸ்ரீனிவாசன்
பொருளாதார நிபுணராக தமிழ்நாடு இளைஞர்களிடம் பெரிதும் அறிமுகம் பெற்ற ஒருவரை உள்ளார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
ஆனந்த் ஸ்ரீனிவாசன்
பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன், இளைஞர்களுக்கு பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பது குறித்தும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டுமென்பதையெல்லாம் குறித்து பேசி பிரபலமானவர்.
இவருக்கு தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரபூர்வமாக காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் பதிவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பதவி பெற்றுள்ள அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு @anand_srini
— TN Congress IT & Social Media Department (@TNCCITSMDept) February 26, 2024
அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் துறை சார்பாக பணி சிறக்க எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். pic.twitter.com/tVATPJm6Ge