விரைவில் திருமணம் - 2 கோவிலுக்கு 5,00,00,000 அள்ளிக்கொடுத்த ஆனந்த் அம்பானி - பின்னணி இது தானா?
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.
அம்பானி
உலக அளவில் பிரபலமாக இருக்கும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன், ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்று முடிந்தது.
அண்மையில், திருமணம் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் அமெரிக்கா பாப் பாடகியான ரிஹானா இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி சென்றார். அந்நிகழ்ச்சிக்கு மட்டும் அவருக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்ப்பட்டதாக கூறப்பட்டது. அதே போல, 3 தினம் நடந்த விருந்தில் அம்பானியின் சொந்த ஊரை சேர்ந்த மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
5 கோடி
பெரும் தலைப்பு செய்தியாக இருக்கும் இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. ஆனந்த் அம்பானி கடந்த செவ்வாய்க்கிழமை சைத்ர நவராத்திரி அஷ்டமியை முன்னிட்டு, அசாம் மாநிலத்தில் இருக்கும் கவுஹாத்தி காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
அங்கு அவர் பரிக்ரமா சடங்கையும் செய்துள்ளார். அப்போது அவர் கோவிலுக்கு காணிக்கையாக ரூ.2,51,00,000 வழங்கியுள்ளார். இதே போல, பூரி ஜெகநாதர் கோயிலிற்கும் அவர் 2,50,00,000 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.