ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரிலையன்ஸ்!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தை ஒட்டி ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆனந்த் - ராதிகா
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் விரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணம்
இதையடுத்து, மே 29 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை முக்கிய விருந்தினர்களுடன் ரோம் முதல் கேன்ஸ் வரை கப்பலில் சுற்றுலா சென்றனர். தற்போது இந்த கொண்டாட்டத்தில் ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு மகாராஷ்ட்ராவில் உள்ள பல்கார் மாவட்டத்தில் நடைபெறும்.
இதில், முகேஷ் அம்பானியும் நீட்டா அம்பானியும் குடும்பத்தினருடன் கலந்துகொள்வார்கள்.
மேலும் விருப்பமுள்ளவர்கள் இந்த நிகழ்ச்சிக்காக தங்களது பங்களிப்பும் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil