சொகுசு கப்பலில்...800 விருந்தினர்கள்..600 பணியாளர்கள் !! நடுக்கடலில் அம்பானியின் திருமணம் கொண்டாட்டம்
அம்பானியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விழாக்கள் களைகட்டி வருகின்றன.
அம்பானி
உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று,
திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் சில மாதங்கள் முன்பு கலைக்கட்டின. நாட்டின் முக்கிய தலைப்புச்செய்தி அது தான். 3 நாட்கள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி உலகின் பல முக்கிய நட்சத்திரங்களும் பங்கேற்று கொண்டனர்.
முதல் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில், தற்போது 2-வது திருமண விழா கொண்டாட்டங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, லண்டனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.592 கோடி மதிப்புடைய ஸ்டோக் பார்க் எஸ்டேட் ஹோட்டலில் திருமணம் நடக்கும் என பேசப்பட்டது. ஆனால், அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
2-வது திருமண கொண்டாட்டம்
வரும் ஜூலை 12-ஆம் தேதி நிகழவுள்ள திருமண விழாவிற்கு முந்தைய கொண்டாட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் மே 28ஆம் தேதி இத்தாலி துவங்கவுள்ளது. அதாவது உல்லாசக் கப்பல் ஒன்றில் நடைபெறும் நிகழ்வில் இத்தாலியில் இருந்து புறப்படும் கப்பல் தெற்கு பிரான்ஸ் சென்று முடிவடைகிறது.
சுமார் 4380 கி.மீ. நடைபெறும் இப்பயணத்தில் பாலிவுட் பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
இதற்காக மொத்தமாக 800 பேர் பங்கேற்கும் கொண்டாட்டத்தில். சுமார் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.