ரூ.45,000 கோடி சொத்துக்கு வாரிசு - உதறி விட்டு துறவறம் சென்ற தமிழ் தொழிலதிபர் மகன்
ரூ. 45000 கோடி சொத்துக்கு வாரிசான நபர் அதை உதறிவிட்டு துறவறம் சென்றுள்ளார்.
ரூ.45,000 கோடி சொத்து
பூர்விக சொத்து ஒரு சென்ட் நிலமாக இருந்தாலும் கூட பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வாரிசுகள் நீதிமன்றங்கள் செல்வது நிறைய பகுதிகளில் காண முடிகிறது.
ஆனால் இங்கு தந்தையின் ரூ.45,000 கோடி தொழில் சாம்ராஜ்யத்திற்கு ஒரே வாரிசான மகன் ஒருவர் தொழில் பணம் எதிலும் நாட்டமில்லாமல் அனைத்தையும் உதறிவிட்டு துறவறம் பூண்டுள்ளார்.
ஆனந்த் கிருஷ்ணன்
இலங்கை வம்சாவளி தமிழரான ஆனந்த் கிருஷ்ணன் மலேசியாவின் 3வது பெரிய பணக்காரர் ஆவார். தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், செயற்கைக்கோள் என பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்துள்ளார்.
மலேசியாவில் AK என்ற பெயரில் அறியப்படும் இவருக்கு சொந்தமாக 3 செயற்கைகோள்கள் உள்ளன. மேலும் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல்லின் உரிமையாளரும் இவரே.
அனந்த கிருஷ்ணனின் மனைவி மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களின் மகனான வென் அஜான் சிரிபான்யோ தனது தாயாரின் குடும்பத்தை பார்க்க 18 வயதில் தாய்லாந்து சென்றுள்ளார்.
துறவு வாழ்க்கை
அப்போது அங்குள்ளவர்கள் துறவு வாழ்க்கை இவரை கவர இவரும் துறவறம் செல்ல முடிவெடுத்துள்ளார். இவரின் முடிவுக்கு அவரது தந்தை உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவர் தனது பள்ளி படிப்பை இங்கிலாந்தில் படித்தார் எனவும் தமிழ், தாய் உள்ளிட்ட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக வென் அஜான் சிரிபான்யோ துறவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். யாசகம் பெற்று வாழ்ந்து வந்த அவர், தற்போது தாய்லாந்தில் உள்ள "Dtao Dum" என்ற மடாலயத்தில் மடாதிபதியாக பணியாற்றுகிறார்.