முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி பிட்காயின் - தவறுதலாக குப்பையில் வீசிய ex காதலி

United Kingdom Bitcoin Price Money
By Karthikraja Nov 28, 2024 09:00 AM GMT
Report

ரூ.5,900 கோடி மதிப்புள்ள பிட்காயினை பெண் தவறுதலாக குப்பையில் வீசி விட்டார்.

பிட்காயின்

இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேர்ந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ்(James Howells) கடந்த 2008 ஆம் ஆண்டு 8,000 பிட்காயின்களை(bitcoin) வாங்கியுள்ளார். 

James Howells bitcoin uk

பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த பிட்காயின்களை வாங்கியதை மறந்துவிட்டார். இந்நிலையில் அவரது முன்னாள் காதலி ஹல்பினா, அந்த பார்சூன் பிட்காயின் மற்றும் அதன் டிஜிட்டர் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்வை வீடுகளை சுத்தப்படுத்தும்போது தவறுதலாக குப்பையில் போட்டு விட்டார். 

52 கோடிக்கு ஏலம் போன வாழைப்பழம் - வாங்கியவர் என்ன சொன்னார் தெரியுமா?

52 கோடிக்கு ஏலம் போன வாழைப்பழம் - வாங்கியவர் என்ன சொன்னார் தெரியுமா?

ரூ.5,900 கோடி

பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஹோவல்ஸ் இது குறித்து ஹல்பினாவிடம் கேட்டுள்ளார். "அதை குப்பையில் எறிந்துவிட்டதாகவும், அதில் என்ன இருந்தது என்பது எனக்கு தெரியாது. அதனால் அதை இழந்தது எனது தவறை அல்ல" என ஹல்பினா தெரிவித்துள்ளார். 

8000 bitcoin uk

டிஜிட்டல் கரன்சியான பிட்காயினின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பிட்காயினின் மதிப்பு 80 லட்சத்தை தொட்டுள்ளது. அதன்படி ஹோவல்ஸிடம் இருந்த மொத்த பிட்காயினின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.5,900 கோடி என கூறப்படுகிறது.

அனுமதி மறுப்பு

தற்போது அந்த ஹார்ட் டிரைவ் நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்கு கீழ் புதைந்துள்ளது.  "குப்பைக் கிடங்கில் ஹார்ட் டிரைவ்வை தேட அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எனக்கு என்னுடைய புதையல் கிடைக்கும்" என ஹோவல்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஹார்ட் டிரைவ் திரும்ப கிடைத்தால் நியூபோர்ட் நகர மேம்பாட்டிற்க்கு 10 சதவீத தொகையை தானமாக அளிப்பதாக ஹோவல்ஸ் உறுதியளித்துள்ளார். "அவ்வளவு குப்பைகளையும் தோண்டி ஹார்ட் டிரைவ்வை கண்டுபிடிப்பது சாத்தியமில்லாதது. அப்படி செய்தால் அந்த பகுதியில் மிகப்பெரிய சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும்" என நியூபோர்ட் சிட்டி கவுன்சில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.