நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் : வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா வீடியோ

Viral Video Anand Mahindra
By Irumporai Jul 04, 2022 11:00 AM GMT
Report

நான்கு நண்பர்கள் ஜாலியாக சாப்பிட்டுக் கொண்டே டைனிங் டேபிளில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் ட்விட்டர் தளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் கருத்துக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

வைரலாகும் வீடியோ

இவரது பதிவிற்கென்றே தனிக் கூட்டம் இணையத்தில் உள்ளது. அந்த வகையில் தற்போது ஆனந்த் மஹிந்திரா ஒரு வீடியோவினை பதிவிடுள்ளார்.அதில் நான்கு இளைஞர்கள் ஜாலியாக ஒரு நகரும் டைனிங் டேபிளில் அமர்ந்த படி பெட்ரோல் நிலையம் வந்து பெட்ரோல் நிரப்புகின்றனர்.

டைனிங் டேபிளில் பயணிக்கும் நண்பர்கள்

பிறகு வண்டியினை ஓட்டி செல்வது போல உணவருந்தியபடியே செல்கின்றனர். இந்த வீடியோவினை பகிர்ந்துள்ள ஆனந்த மஹிந்திரா

I guess this is e-mobility. Where ‘e’ stands for eat… என பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 

விம்பிள்டனிலும் "வாத்தி கம்மிங்" : விளக்கம் தேடிய வெளிநாட்டினர், குஷியில் தமிழர்கள்